கன்டெய்னர் லாரி ஆக்கிரமிப்பால் ஒரகடம் ஆறு வழிச்சாலை குறுகியது!!

ஸ்ரீபெரும்புதுார்–ஒரகடத்தில், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளால், ஆறு வழிச்சாலை இரண்டு வழியாக குறுகிவிட்டது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் ‘சிப்காட்’ தொழிற் பூங்கா உள்ளது. இங்கு கார், கார் உதிரி பாகங்கள், மொபைல் போன், லாரி, மோட்டார் சைக்கிள், டயர் தயாரிப்பு தொழிற்சாலைகள் என, 120க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இங்கு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை ஏற்றிச்செல்லவும் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் வருகின்றன.  கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகள் மீது, காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.