கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்…

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். கடந்த 10 மாத காலமாக வீடு கட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள விலையோடு ஒப்பிடுகையில், மரத்தின் விலை மட்டும் 35 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும், குழாய்களின் விலை 20 சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும், மின் சாதனங்களின் விலை 10 சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும், சிக்கனமான பட்ஜெட்டில் வீடு கட்டுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வழக்கத்திற்கு மாறான இந்த விலை உயர்வு கட்டுமானத் தொழிலையே முடக்கிப் போட்டுள்ளதாகவும், வீடு கட்டுவதற்கான செலவு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.