இனி நெட்பிளிக்ஸ் கணக்குகளை இலவசமாக பயன்படுத்த முடியாது; துணை கணக்குகளுக்கு புதிய கட்டணம் எவ்வளவு?
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் பல லட்சம் பயனாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மாதம் அல்லது வருட கணக்கில் சந்தா தொகையை செலுத்தி நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தி திரைப்படங்களை பார்த்து வருகின்றனர்.
இதற்கென இவர்களுக்கு பிரத்யேக உள்நுழைவு கடவுச்சொல் கொடுக்கப்படும். அதே நேரத்தில் இவர்கள் அந்த கடவுச்சொல்லை கட்டணம் செலுத்தாத மற்ற நபர்களுக்கு கொடுக்கும் பட்சத்தில் அவர்களும் இந்த தளத்தில் கட்டணம் இன்றி திரைப்படங்களை பார்க்கலாம். சமீப காலமாக கட்டணம் செலுத்தாமல் இந்த தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
இதற்கிடையில் ஓடிடி நிறுவனங்களின் சந்தையில் போட்டி அதிகரித்து வருகிறது.
இதனால் இன்னும் சில தினங்களில் சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெரு நாட்டில் உள்ள சந்தாதாரர்கள் அவர்களின் கணக்குளை பிறருக்கு கொடுக்கும் பட்சத்தில் அதை துணைக் கணக்காக கருத்தில் கொண்டு அதற்கு ரூ.150 முதல் ரூ.250 வரை வரையிலான மாதக் கட்டணத்தில் இரண்டு நபர்களைக்கு மட்டும் வழங்கும் வசதியை நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்தவுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.