முதலில் யார் பயணிகளை ஏற்றுவது : பஸ் ஊழியர்கள் மோதலால் பரபரப்பு !!
கோவில்பட்டி அருகே யார் முதலில் பயணிகளை ஏற்றுவது என்ற பிரச்சினையில் தனியார் பஸ் ஊழியர்கள் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 2 தனியார் பஸ்கள் 5 நிமிட இடைவெளியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியுள்ளது. முதலில் கிளம்பிய தனியார் பஸ்சினை, இரண்டாவதாக கிளம்பிய தனியார் பஸ் முந்தி கொண்டு, எட்டயபுரம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு, ஏற்றிக் கொண்டு இருந்தாக தெரிகிறது. அதனை தொடர்ந்து வந்த, முதலில் புறப்பட்ட தனியார் பஸ்சின் டிரைவரை, பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அந்த தனியார் பஸ்சை மறித்து நிறுத்தினார் இதுபோன்ற பிரச்சினை இந்த பஸ்நிலையத்தில் அடிக்கடி நடப்பதாகவும், இனிமேல் இப்பிரச்சினை நடக்காதவாறு போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்