மாஜி அமைச்சர் வேலுமணி வீட்டில் ரூ.84 லட்சம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் 2 வது முறை சோதனை நடைபெற்றது. இதில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது. இந்த சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.84 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள், 11.153 கிலோ தங்க நகைகள், 118.506 கிலோ வெள்ளி மற்றும் சில ஆவணங்களும் கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடி கணிணி, கணிணி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்