பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு? – ‘மாஸ்டர்’ ப்ளான்!!!

தேர்தல் திட்ட வகுப்பாளரும், ஐ-பேக் நிறுவனத்தின் தலைவருமான பிரசாந்த் கிஷோரை, நடிகர் விஜய் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையான ஆலோசனைகளை, நடிகர் விஜய்க்கு, பிரசாந்த் கிஷோர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக, விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்து தேர்தலில் களமிறங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்