நெய்வேலி என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக வெள்ளூர் வீடுகளை அகற்ற எதிர்ப்பு…

நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக வடக்குவெள்ளூர் கிராமத்தில் வீடுகளை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீடுகளை அகற்ற வரும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்குவெள்ளூர் செல்லும் சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கிராமத்திற்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து பெண்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.