எம்பி.க்களின் பிள்ளைகளுக்கு சீட் கிடைக்காததற்கு நான் தான் காரணம்: பிரதமர் மோடி பேச்சு!

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப் பிரதேசம் உட்பட 4 மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனையொட்டி டெல்லியில் உள்ள பாஜ அலுவலகத்தில் பாஜ நாடாளுமன்ற கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘வாரிசு அரசியலுக்கு எதிராக பாஜ எம்பிக்கள் போராட வேண்டும். அது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. வாரிசு அரசியலை எதிர்த்து போராடுவதற்கு முன்பாக, பாஜ.வில் இது போன்ற நடைமுறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். கட்சியை சேர்ந்த எம்பி.க்களின் பிள்ளைகளுக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு நான்தான் காரணம்,” என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.