இன்று 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை கூடும்!!!

தமிழகத்தில் இன்று (மார்ச் 16) இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை கூடுதலாக பதிவாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும். சென்னையில் இன்று, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்சம் 34 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.