இந்தியர்களை மீட்கும் பணியில் பிரதமர் மோடி உரையாடல்!

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க, அதன் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்தீப் பூரி, வி.கே.சிங் ஆகியோர் சிறப்பு துாதர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய துாதரக அதிகாரிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோருடன், பிரதமர் மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாடினார். அப்போது இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் குறித்து மோடி கேட்டறிந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.