அறநிலையத் துறை கணக்கில் வராத தங்க ருத்ராட்ச மாலை : ஆட்சியரிடம் வழக்கறிஞர் புகார் !!

ராமேஸ்வரம் ராமநாதசாமி ஆலயத்திற்கு நன்கொடையாக கொடுத்த பல கோடி மதிப்பிலான  தங்க ருத்ராட்ச மாலையை மோசடி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பிஜேபி கட்சியை சேர்ந்த வழக்கறிஞர். கடந்த மார்ச் 1ஆம் தேதி கோவையைச் சேர்ந்த  பிரபல தொழில் அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தார்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி  ஆலயத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு நேர்த்திக் கடன் நன்கொடையாக பல கோடி மதிப்பிலான தங்க ருத்ராட்ச மணி மாலை கொடுக்கப்பட்டது.  தற்போது வரைக்கும் தங்க ருத்ராட்ச மணி மாலை இந்து அறநிலைத்துறை கணக்கில் வராமல்  இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.