விமானநிலைய ஓடுதள பாதை சீரமைப்பு பணி: ஏப்., முதல் இரவு சேவை நிறுத்தம்!!!

கோவை சர்வதேச விமானநிலையத்தில் ஓடுதள பாதை சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளதால், ஏப்., மாதம் முதல் இரவு நேர விமான சேவை நிறுத்தப்படுகிறது. ஓடுதள பாதை சீரமைப்பு பணிகள் ஏப்., மாதம் முதல் துவங்கப்படுகிறது. விமான இயக்கம் இல்லாத நேரத்தில் இந்த பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விமான சேவை மற்றும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த சீரமைப்புபணி காரணமாக ஏப்., மாதம் முதல் இரவு, 10.00 மணி முதல் அதிகாலை, 4.00 மணி வரை எவ்வித விமான சேவையும் இருக்காது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.