ரேஷன் கடை ஊழியர்கள் பணிச்சுமை.. அரசு எடுக்கும்ஆக்ஷன்!!

ரேஷன் கடைகளில் எடையாளர், விற்பனையாளர் பணியிடங்களில் 4,000 பேர் விரைவில் நிரப்பப்பட உள்ளனர் என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரே நபர் இரண்டு, மூன்று கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை நீடித்து வந்ததால் பணிச்சுமையால் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களின் பணிச்சுமை.யை குறைக்கும் விதத்தில் மாவட்டவாரியாக மொத்தம் 3,300 விற்பனையாளர்கள், 600 எடையாளர்கள் என மொத்தம் 4,000 பேர் விரைவில் நிரப்பப்பட உள்ளனர். இப்பணி நியமனங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.