ரூ.2.50 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் மூவர் கைது!!!
நகைக்கடை உரிமையாளரை கடத்தி, 2.50 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், டிரைவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் நகைக்கடை வைத்திருப்பவர் தர்மராஜ், 61. நேற்று முன்தினம் இவர், தன் உதவியாளர் கோவிந்தராஜ், 56, என்பவருடன் நாகர்கோவிலில் நகை வாங்க 2.50 கோடி ரூபாயுடன் காரில் புறப்பட்டார். தனக்கன்குளத்தைச் சேர்ந்த டிரைவர் பிரவீன்குமார், 25, காரை ஓட்டினார். .டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில், தர்மராஜ் அடிக்கடி அதிக பணத்துடன் சென்று நகை வாங்குவதை அறிந்து, நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளைஅடிக்க, பிரவீன்குமார் திட்டமிட்டது தெரிந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.