மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு 132 ரன்கள் இலக்கு!!
மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 14 ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது. அணியின் கேப்டன் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற,
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45.5 ஓவர்களில் 131 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.