புதிதாக 50 வார்டுகளை உருவாக்கும் முன் எல்லை விரிவாக்கம் தேவை!!!

கோவை மாநகராட்சியை, 2011ல் விரிவாக்கம் செய்தபோது, மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகிய உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டன. அதற்கு முன், 152 சதுர கி.மீ., பரப்பில் இருந்த மாநகராட்சி, 254 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விரிந்தது. அப்போதே, அமைப்பு ரீதியாக கோவையுடன் இணைக்கப்பட வேண்டிய பல உள்ளாட்சிகளை, அங்கிருந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிலரது அரசியல் அழுத்தத்தால், சேர்க்காமல் தவிர்த்து விட்டதாக புகார்கள் எழுந்தன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி