தென்னை நார் தொழிலை மேம்படுத்த… ரிசர்வ் வங்கியே துணை!!!

தென்னை நார் தொழில் மேம்படுத்த, வங்கிகள், கடன் செலுத்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்,’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிசர்வ் வங்கிக்கு கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. கண்டெய்னர் வாடகை அதிகரித்துள்ள சூழலில், தென்னை நார் விலை மிக குறைந்துள்ளது. இதனால், தொழில் மிகவும் பாதித்து, உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வங்கியில் பெற்ற கடன் செலுத்துவதற்கு காலக்கெடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.மனுவில், வங்கியில் மூன்று மாதம் பணம் கட்டாவிட்டால், செயல்படாத கணக்கு (NPA), என, மாறிவிடும். எனவே, தற்போதுள்ள சூழலில், தென்னை நார் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்குகள், செயல்படாத கணக்குகளாக உள்ளது.  ரிசர்வ் வங்கி கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.