திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்!!!
பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழி தேரோட்டம் திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக் கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. நேற்று இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் ஆழித் தேருக்கு எழுந்தருளினார். அதிகாலை 5 மணிக்கு விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்ட தேர் என பெயர் பெற்ற, 300 டன் எடையும், 96 அடி உயரமும் கொண்ட ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.