செருப்பு போடாத பாஜக எம்.எல்.ஏ. பேரன் அலப்பறை!!!

கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஸ்ரீ எம்.ஆர்.காந்தி என்ற வாசகம் எழுதப்பட்ட பைக்கில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவரிம் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி, காலில் செருப்பு கூட போடாமல், கதர் வேட்டி அணிந்து மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார். சட்டமன்றத்துக்குள் முதல் முறை செல்லும்போது கூட அவர் செருப்பு போடாமல் வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. எம்.ஆர்.காந்தியின் பேரன் என்று வலம் வரும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். நம்பர் ப்ளேட் அல்லாமல் அதற்கு பதில், “கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஸ்ரீ எம்.ஆர்.காந்தி” என்ற வாசகம் எழுதப்பட்ட விலை உயர்ந்த பைக்குகளில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.