சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி, குழந்தை பலி!!!
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவனும். அவரை காப்பாற்ற சென்ற மனைவி, குழந்தையும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம்.34. கொத்தனார். இவர் இன்று தனது மாடிவீட்டில் பழுதடைந்த மின்சார ஸ்விட்சை சரி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிவாச ரத்தினத்தை மின்சாரம் தாக்கி உள்ளது. அதனைக் கண்ட அவரது மனைவி ஹேமா.28. இடுப்பில் தனது ஒரு வயது மகள் நிஹன்யாவை தூக்கிக்கொண்டு கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.