‘சி.பா. ஆதித்தனார் விருது’: மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்….

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கி விருது தொகையான இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை,  தகுதியுரை, கேடயம், பொன்னாடையும் மனுஷ்யபுத்திரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து 2021-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை,  தகுதியுரை, கேடயம், பொன்னாடையும் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்