குடற்புழு நீக்க முகாம் கோவையில் துவக்கம்!!!

கோவையில், நேற்று ஒரே நாளில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு நேற்று பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை சார்பில், முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆறு முதல், 18 வயதுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் குடற்புழு மாத்திரை வழங்கப்பட்டது. மேலும், குடற்புழு தொற்றால் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை உள்ளிட்ட பாதிப்புகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.