காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்… கோலாகலம்!!!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், ஏலவார்குழலி அம்பிகையுடன் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, 8ல் கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.அன்று முதல் தினமும், காலை, மாலையில் ஏலவார்குழலி, அம்பிகையுடன், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகள் வழியாக உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்