காங்கயம் இன மாடுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை திட்டம்!!!

காங்கயம் இன மாடுகளுக்கு சினைபிடிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, ‘நபார்டு’ வங்கி உதவியுடன், ‘ஹார்மோன்’ சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காங்கயம் நாட்டு மாடுகள், 16 மாத இடைவெளியில், கன்று ஈன வேண்டும்.மாறாக, ஹார்மோன் பிரச்னையால், கன்று ஈனும் இடைவெளி அதிகரிப்பதால், நஷ்டம் ஏற்படுகிறது. சரியான இடைவெளியுடன், கன்று ஈனும் இடைவெளியை பராமரிக்க, ஹார்மோன் சிகிச்சை அவசியம். அதற்காக, நபார்டு வங்கி உதவியுடன் கால்நடைத்துறை சார்பில், சிறப்பு சிகிச்சை அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. காங்கயம் நாட்டு மாடுகள் உள்ள பகுதியில் சிறப்பு பயிற்சியும், சிகிச்சை முகாமும் நடத்தப்படும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்