உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படையினர் தாக்குதல்; குடியிருப்பு கட்டடங்களை தகர்த்ததால் பெரும் பரபரப்பு!

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தகர்த்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய விரும்பியது.

அதில் உக்ரைன் இணைந்தால், தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை நிறுத்தினார்.புடின் உத்தரவின்படி, கடந்த 24ம் தேதி உக்ரைனுக்குள் ரஷ்ய படையினர் நுழைந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.