இந்திய மாணவர்களை உலகளவில் அழைத்து செல்லும் புதிய கல்விக் கொள்கை – தமிழிசை…
இந்திய மாணவர்களை உலக அளவில் பிரமாண்ட இடத்துக்கு புதிய கல்விக் கொள்கை அழைத்து செல்லும்,” என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கல்வியின் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்காகத் தான் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இதை மேம்போக்காக கூறவில்லை. நான், 16 பல்கலைகளை நிர்வகித்துக் கொண்டிருக்கும் வேந்தராக இதை கூறுகிறேன். பிரதமர் மோடி கூறியது போல், புதிய கல்விக் கொள்கை இந்த நாட்டு மக்களை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும். உலகில் உள்ள தலைசிறந்த பல்கலைகளின் பட்டியலில் நம் நாட்டு பல்கலைகள், கல்லுாரிகள் இடம்பெறுவதில், சிக்கல் ஏற்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.