வெளி மாவட்ட, மாநில தொழிலாளர் விபரம் சேகரிப்பு துவங்குகிறது!!!
திருப்பூரில், பனியன் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளி மாவட்ட, மாநில தொழிலாளர்களின் விபரங்களை, மூன்று துறையை சேர்ந்த குழுவினர் திரட்டும் பணியை துவங்க உள்ளனர். தொழிலாளர் ‘போர்வை’யில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் இனி தப்ப முடியாது.’டாலர் சிட்டி’ என்று புகழ் பெற்ற திருப்பூரில், 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஏறத்தாழ, 4 ஆயிரம் பனியன் நிறுவனங்களால், 24 ஆயிரம் கோடி ரூபாயை அன்னிய செலாவணியாக நாட்டுக்கு ஈட்டப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி உ.பி., பீகார், ஒடிசா, மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலத்தினர் வேலை வாய்ப்புக்காக இங்கு தங்கியுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.