மெயின் ரோட்டில் அராஜகத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார் – ஆர்.எஸ்.பாரதி..

சட்டத்தின் ஆட்சிதான் ஜெயக்குமாரை கைது செய்தது என திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு என விமர்சித்ததற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள அறிக்கையில், “சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு- அராஜகமாகச் செயல்பட்டு- ஏதோ தானே ஒரு சினிமா போலீஸ் அதிகாரி போல் நினைத்துக்கொண்டு – திமுக தொண்டரை இழிவாக நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆணவச் செயலை அனைத்து ஊடகங்களும் காட்சிப்படுத்திய பிறகும் கூட, ”அதிமுகவை எச்சரிப்பதற்காக என்னைக் கைது செய்திருக்கிறார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்