பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்; மேயர் பிரியா அப்டேட்!!

சென்னையில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க ஏற்பாடுசென்னை எம்.ஜி.ஆர் மாநகராட்சி பள்ளியில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார். முதல் நாளான இன்று 15 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.முதல் நாளான இன்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படுவதாக மேயர் பிரியா தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘வருமுன் காப்போம்’ என்ற மருத்துவ முகாமை சென்னை மேயர் தொடங்கி வைத்தார். இதில் பல்துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்