தமிழன் எங்கிருந்தாலும் தி.மு.க., காப்பாற்றும்’: ஸ்டாலின்…
சென்னை-”உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி; உக்ரைனில் உள்ள தமிழனாக இருந்தாலும் சரி; அவர்களை காப்பாற்றுகிற ஒரே கட்சியாக தி.மு.க., திகழ்கிறது,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். திருவாவடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை இல்லத் திருமண விழா, சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழ் என்றாலே நமக்கு தானாகவே ஒரு உத்வேகம் வருகிறது. அது, உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி; உக்ரைனில் இருக்கிற தமிழனாக இருந்தாலும் சரி; அவர்களை காப்பாற்றுகிற ஒரே கட்சியாக தி.மு.க., திகழ்கிறது.உக்ரைனில் 2,000 தமிழர்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம். இந்தியாவில் எந்த மாநிலமும் முன்வராத நிலையில், அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து வருவதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றோம்.முயற்சித்தோம்;
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி