உலக செவித்திறன் நாள் விழா!!
திருப்போரூர்: முட்டுக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் உலக செவித்திறன் நாள் விழா நேற்று நடைபெற்றது. கோவளம் கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவித்திறன் விழிப்புணர்வு குறித்த மணற்சிற்பம் அமைத்தல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு பேரணி போன்றவை நடைபெற்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனரும் பேச்சு மற்றும் கேட்டல் துறைத்தலைவருமான அமர்நாத் போட்டிகளை தொடங்கி வைத்தார். கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் சுந்தர், துணைத்தலைவர் ஆதிலட்சுமி பெருமாள் ஆகியோர் கலந்துக் கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினர். முடிவில் வழக்கறிஞர் அபிநயா நன்றி கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.