மின் உற்பத்தி முடங்கும் அபாயம்!!!!


சென்னை:தமிழக மின் வாரியத்திடம், நேற்றைய நிலவரப்படி, ஒன்றரை நாட்களுக்கு தேவையான, 1 லட்சம் டன் மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதால், மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்திற்கும் நெருக்கடி ஏற்பட்டு, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டது. பின், நவ., டிச., மாதங்களில் பெய்த கன மழையால், மின் தேவை சரிவடைந்ததால், நிலக்கரி பயன்பாடும் குறைந்தது. இதனால், நிலக்கரியை மிச்சப்படுத்தி, தேவைக்கு ஏற்ப மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

: தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்