மிகவும் விரும்பத்தக்க நாடு ரஷ்யாவின் அந்தஸ்து பறிப்பு!

உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜி-7 நாடுகளுடன் இணைந்து மிகவும் விரும்பத்தக்க நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யாவை நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்கா அதிபர் பைடன் தெரிவிக்க இருக்கிறார். இதன் மூலம், ரஷ்ய பொருட்களின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், அவற்றின் இறக்குமதி குறைந்து, ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக கூடும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.