நயன்தாரா சம்பளம் ரூ.10 கோடி?

கதாநாயகிகள் சம்பளம் சமீப காலமாக மளமளவென உயர்ந்து வருகிறது. கதாநாயகன் இல்லாமலேயே தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் கதாநாயகிகள் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த படங்கள் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூலும் குவிக்கின்றன. இதை மனதில் வைத்தே சம்பளம் அதிகம் கேட்கிறார்கள்.

இந்தியில் முன்னணி கதாநாயகிகள் ஒரு படத்தில் நடிக்க ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் தென்னிந்திய நடிகைகள் சம்பளம் அந்த அளவுக்கு உயராமல் இருந்தது. நயன்தாரா மட்டுமே ஒரு படத்துக்கு ரூ.5 கோடி, ரூ.6 கோடி என்று கேட்பதாக கூறப்பட்டது. மற்ற நடிகைகள் சம்பளம் ரூ.3 கோடிக்கு கீழே உள்ளது.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தி இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் புதிய படமொன்றில் நடிக்க நயன்தாராவை தயாரிப்பாளர் ஒருவர் அணுகியபோது ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கு பட உலகில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா இப்போது இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார். இந்திக்கு போனதாலேயே சம்பள தொகையை உயர்த்திவிட்டார் என்கின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.