தைப்பூச திருவிழாவுக்கு ‘யுனெஸ்கோ’வுக்கு சிங்கப்பூர் விண்ணப்பம்..

 தமிழர்கள் பக்தியுடன் கொண்டாடும் தைப்பூசத் திருவிழாவை, ‘யுனெஸ்கோ’வின் பாரம்பரிய கலாசாரங்கள் பட்டியலில் சேர்க்க, சிங்கப்பூர் அரசு தேர்வு செய்துள்ளது. ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, உலக நாடுகளின் கலாசார, பாரம்பரிய பெருமைகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இதன்படி யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற, தமிழர்களின் தைப்பூச திருவிழா உள்ளிட்ட 10 சிறப்பு நிகழ்வுகளை சிங்கப்பூர் அரசு தேர்வு செய்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்