தாலுகாவுக்கு ஒரு சார் — பதிவாளர் பதிவுத்துறை நடவடிக்கை…
சென்னை : தாலுகாவுக்கு ஒரு சார் -பதிவாளர் அலுவலகம் இருக்கும் வகையில், எல்லை வரையறை பணிகளை விரைந்து முடிக்க, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், ஒரு சார் – பதிவக எல்லையில், ஒன்றுக்கு மேற்பட்ட தாலுகாக்கள் இருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக, பட்டா மாறுதல் பணிகளில், பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இது குறித்து, பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒரு சார் – பதிவாளர் அலுவலக எல்லைக்குள் வரும் அனைத்து கிராமங்களும், ஒரே தாலுகாவை சேர்ந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.