சில்லி பாயின்ட்…!!!!

ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் காலை 6.30க்கு தொடங்குகிறது.
* இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64 ரன் முன்னிலை பெற்றது. டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 311 ரன் எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் நேற்று 375 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 9 மணி நேரம் களத்தில் நின்ற நிக்ருமா 123 ரன் விளாசினார்.
* பெங்களூருவில் இன்று தொடங்கும் பகல்/இரவு டெஸ்ட் போட்டியைக் காண, சின்னசாமி ஸ்டேடியத்தில் 100 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
* ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை நட்சத்திரம் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.