கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நெல்லை கொட்டி போராட்டம்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே படப்பக்குறிச்சி, பொட்டல், திருவண்நாதபுரம், கோட்டூர், பெரியபாளையம், திம்மராஜபுரம் பகுதியில் தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல் அறுவடை செய்து ஆண்டுதோறும் படப்பக்குறிச்சி பகுதியில் அமைக்கப்படும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். இந்த ஆண்டு அங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியவில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்