கோவை சிறைக்கு யுவராஜ் மாற்றம்….
கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில், சாகும் வரை சிறை தண்டனை பெற்ற தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். சிறை அதிகாரிகள், நிர்வாக காரணங்களுக்காக அவர் மாற்றப்பட்டதாக கூறினர். சிறைக்குள் ஜாதிய உணர்வுடன் யுவராஜ் செயல்பட்டதால், அவருக்கும், அதிகாரிகளுக்கும் கருத்து மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்