கூலிப்படையினரை ஒடுக்க ஸ்டாலின் உத்தரவு…
சென்னை : ”சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத சக்திகளை, கூலிப்படைகளை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதை, மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்தில், நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் போன்றவற்றை, அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்