இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல; தமிழிசை..
சென்னை சாஸ்திரி பவனில் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு கருத்தரங்கை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து நாளும் பெண்களுக்கான நாள் தான் என்பதால் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். பெண்ணுரிமையை நாம் தவறாக பயன்படுத்துகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவதுதான் பெண்ணுரிமை என நினைக்கின்றனர். ஆனால், நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.