‘ஈகோ யுத்தம்’ வளர்ச்சி பணி தடைபடும் அபாயம்!!!
திருப்பூர்: ‘அமைச்சர் – எம்.எல்.ஏ., – மேயர் என மூன்று ‘அதிகார மையங்கள்’ இடையே நிலவும் ‘ஈகோ’, திருப்பூர் மாநகர மேம்பாட்டுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது,’ என்ற எண்ணம், தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது. ‘தேர்தலின்போது கட்சி மற்றும் வேட்பாளர்கள் யார் என்று எண்ணி, பொதுமக்கள் ஓட்டுப்போட்டனர். பதவிக்கு வந்த பின், அவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்தான். அமைச்சர் – எம்.எல்.ஏ., – மேயர் தரப்பினர், ‘அதிகார மையங்களாக’ கருதாமல், ‘மக்கள் சேவகர்கள்’ என்ற எண்ணத்துடன் ‘ஈகோ’ பார்க்காமல் செயல்பட வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்