6 மணி நேரம் சிலம்பம் சுற்றி 9 மாத கர்ப்பிணி பெண் அசத்தல்!!!

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் மகளிர் தினத்தை முன்னிட்டு, 9 மாத கர்ப்பணி பெண் ஒருவர், 6 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். தற்போது 9 மாத கர்ப்பிணியான ஷீலா, மகளிர் தினத்தை முன்னிட்டு, அணைக்காடு சிலம்ப கூடம் சார்பில், நேற்று காலை 6:45 மணி முதல் மதியம் 1:35 மணி வரை என சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து, ஒன்றை மற்றும் இரட்டை சிலம்பத்தை இடை விடாது சுற்றி அசத்தினார். இதற்காக அவருக்கு தனியார் அமைப்பான நோபல் சாதனை நிறுவனம் மூலம் சாதனை விருது வழங்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்