5ஜி தொழில்நுட்பத்துடன் ஆப்பிளின் புதிய வகை ‘iphone SE’ அமெரிக்காவில் அறிமுகம்..!

5ஜி தொழில்நுட்பத்துடன் A15 பயோனிக் சிப்செட்டைக் கொண்ட புதிய ‘iphone SE’ என்ற குறைந்த விலை செல்போனை ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக மாடல்களின் அறிமுக நிகழ்ச்சி அதன் அதிகாரபூர்வ இணையதளம் யூடியூப் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் ஒளிபரப்பானது. இதில் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய ரக சிறப்பு பதிவு ஐபோன்கள், ‘ipad Air’ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ‘iphone SE’ வகை போன் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கிறது.

புதிய ‘iphone SE’  A15 பயோனிக் சிப்செட் 4.7 அங்குல டிஸ்பிலேவை கொண்டிருக்கிறது. நீர் புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இது கருப்பு, வெள்ளை, சிகப்பு ஆகிய நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. ‘iphone SE’ 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபிகளில் கிடைக்கும்.  5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன்களை ஒப்பிட்டால் இந்த ‘iphone SE’யின் விலை குறைவு என்கிறது ஆப்பிள். ‘iphone SE’யின் விலை இந்திய மதிப்பில் சுமார் 42 ஆயிரம் ரூபாயாகும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘iphone SE’ வரும் 18ம் தேதி முதல் ஆப்பிள் விற்பனை மையங்களில் கிடைக்கும்.

அதேபோல ‘ipad Air’ என்ற மேம்படுத்தப்பட்ட டாப்லட்டையும் ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கிறது. ஆப்பிள் லாப்டாப்களில் அதிகம் பயன்படுத்தும் ஆதிக்க ஆற்றல் கொண்ட M1 சிப் பொறுத்தப்பட்டிருப்பதால் வேகம் இரண்டு மடங்கு அதிகமாகும். 12 மெகா பிக்சல் கேமரா உள்ள ‘ipad Air’ 100 விழுக்காடு மறுசுயற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இது 5 நிறங்களிலும், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வகைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘ipad Air’யின் தொடக்க விலை இந்திய மதிப்பில் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இவை தவிர ஐமாக்ஸ் ஸ்டூடியோ மானிடர்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதனை எந்தவொரு ஐமாக்ஸ் டெஸ்க்டாப் கணினியுடன் இணைத்து பயன்படுத்தலாம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.