125வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!!!

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 125 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு, மத்திய அரசு நவ.,3 இரவில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதனால், அடுத்த நாள் தீபாவளியன்று நாடு முழுதும் லிட்டர் பெட்ரோல் விலை ஐந்து ரூபாயும்; டீசல் விலை 10 ரூபாயும் சரிந்தது. அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்; டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின. இன்று (மார்ச் 09) வரை 125 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.