ஹாலிவுட்டில் நடிக்கிறார் அலியா பட்!!

 ஹாலிவுட் படத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்க உள்ளார். அலியா பட் நடிப்பில் வெளியான கங்குபாய் கத்தியவாடி இந்தி படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. ரசிகர்களும், விமர்சகர்களும் அலியா பட்டின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். ராஜமவுலி இயக்கத்தில் அலியா பட் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம், இந்த மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ஹாலிவுட்டில் உருவாகும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் நடிக்க அலியா பட் தேர்வாகியுள்ளார். இதில் கல் கடோட், ஜெமி டோர்னன் உள்பட பலர் நடிக்கிறார்கள். டாம் ஹார்பர் இயக்குகிறார். ஸ்பை திரில்லர் படமாக இது உருவாகிறது. இப்படம் நெட் பிளிக்ஸில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.