ராஜினாமா நெருக்கடி: துணை தலைவர் ‘அட்மிட்’!!!

தேனி: பெரியகுளம் நகராட்சி துணைத் தலைவர் ராஜாமுகம்மது ராஜினாமா செய்ய, தி.மு.க., நிர்வாகிகள் நெருக்கடியால் நெஞ்சுவலி ஏற்பட்டு, தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர் ராஜாமுகம்மது ராஜினாமா செய்ய மறுத்தார். நான், தலைமை உத்தரவை மதிக்கிறேன். ஆனால், கூட்டணிக்கு துரோகம் செய்தவர்களுக்கு துணைத் தலைவர் பதவியை வழங்க கூடாது.இதை ஏற்காமல், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர், நிர்வாகிகள், வி.சி., நிர்வாகிகள் நெருக்கடியால் நெஞ்சுவலி ஏற்பட்டது. ராஜினாமா செய்ய மாட்டேன். கட்சி பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா