மோடிக்கு தூது விட்ட சசிகலா – ‘ஷாக்’ ஆன ஓபிஎஸ் – இபிஎஸ்?
உக்ரைன் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல், நம் இந்திய நாட்டிலேயே தொடருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, வி.கே.சசிகலா கடிதம் எழுதி உள்ளது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்