தி.மு.க., கவுன்சிலர் ‘அடாவடி’ : குடிநீர் வாரியத்தினர் ‛அதிரடி…

சென்னை: உரிய கட்டணம் செலுத்தாமல் மாநகராட்சி சாலையை துண்டித்து, முறைகேடாக கழிவு நீர் குழாய் இணைப்பு அமைத்த தி.மு.க., கவுன்சிலருக்கு, ‘பாடம்’ கற்பிக்க, குடிநீர் வாரிய அதிகாரிகள், முறைகேடான இணைப்பை அதிரடியாக அகற்றினர். சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், சாலை வெட்டு மற்றும் கழிவு நீர் இணைப்புக்கான கட்டணம் ஆகியவற்றை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்தாதது குறித்து, கவுன்சிலர் துரைசாமியிடம் விசாரித்தனர்.அத்துடன், உரிய கட்டணம் செலுத்தினால், முறையான இணைப்பு அமைத்துக் கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் கவுன்சிலரோ, ‘நான் மாநகராட்சி கவுன்சிலர்… என்னிடமே, பணம் கேட்கிறீர்களா?’ என ஆவேசப்பட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்