திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து…

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தரிசனம் மேற்கொள்வோரின் சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. இது குறித்து, கோவில் இணை ஆணையர் குமரதுரை கூறியதாவது: கோவிலில் 250 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம், 100 ரூபாய் கட்டண வரிசை, 20 ரூபாய் கட்டண வரிசை, கட்டணமில்லாத பொது தரிசனம் ஆகிய நான்கு வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பாகுபாடை தவிர்க்க, 250 மற்றும் 20 ரூபாய் கட்டண முறை ரத்து செய்யப்படுகிறது. இலவச பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டணம் ஆகிய இரு வழிகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.